அமைச்சர் ஆர்பி உதயகுமார் 
செய்திகள்

புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்.

* ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

* நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.