உண்டியல் எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது. 
செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.51¼ லட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரூ.51 லட்சத்து 23 ஆயிரத்து 104 ரொக்கம் வருவாயாக கிடைத்துள்ளது.

மாலை மலர்

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.

முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், ரூ.51 லட்சத்து 23 ஆயிரத்து 104 ரொக்கமும், 211 கிராம் தங்கமும், 640 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 31-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.