கோப்புப்படம் 
செய்திகள்

கேமரூனில் பாலியல் குற்றச்சாட்டில் யூ டியூப் பிரபலத்துக்கு 5 ஆண்டு சிறை

கேமரூனில் பாலியல் குற்றச்சாட்டில் யூ டியூப் பிரபலத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

யாவுண்டே:

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் ஆக்கப்பட்டுள்ள 31 ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கேமரூன். இந்த நாட்டில் யூ டியூப் சேனல் மூலம் பிரபலமானவர், ஷாகிரோ. திருநங்கையான இவர் அங்கு ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், இரு பால் உறவினர் ஆகியோரின் உரிமைகளுக்காக, அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் ஆவார்.

இவர் தனது தோழியான பேட்ரிசியா என்பவருடன் ஓரினச்சேர்க்கைக்கு முயன்றதாக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. அவர்கள் பொது இடத்தில் ஓரினச்சேர்க்கைக்கு முயன்று, பொது ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து டுவாலாவில் உள்ள கோர்ட்டு நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.

இது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.