திருப்பதி:
திருப்பதி அருகே உள்ள தலக்கோணா வனப்பகுதியில் சிறுத்தை, மான், முயல், கரடி என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது.
மலைப்பகுதியில் உள்ள ஈஸ்வரனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வாகனங்கள் மற்றும் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பக்தர்கள் ஈஸ்வரன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மலைப்பாதையை ஒட்டிய பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முயல் மற்றும் மானை ஒரே நேரத்தில் விழுங்கி கொண்டு இருந்தது.
இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மான் மற்றும் முயல் விழுங்கிய மலைப்பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டு இருந்தது.
இதையடுத்து சில மணி நேரம் கழித்து பாம்பு மலைப்பகுதிக்கு சென்று விட்டது. ஒரே நேரத்தில் மலைப்பாம்பு மான் மற்றும் முயலை விழுங்கியதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.