கோப்புப்படம் 
செய்திகள்

வேட்பு மனு தாக்கல் மையத்தில் புகுந்த பாம்பு- வேட்பாளர்கள் அலறியடித்து ஓட்டம்

கடப்பா மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கலின் போது பஞ்சாயத்து அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் வேட்பாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடப்பா மாவட்டம் எர்ர குண்டா மண்டலம் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் வேட்பாளர்கள் பரபரப்பாக இருந்தனர்.

மேளதாளம் முழங்க வேட்பாளர்கள் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

அப்போது பாம்பு ஒன்று மனுத்தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து பாம்பு பிடிப்பவர் அழைத்து வந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர். இதையடுத்து வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

SCROLL FOR NEXT