கோப்பு படம். 
செய்திகள்

பெட்டவாய்த்தலை அருகே பாம்பு கடித்து பெண் பலி

பெட்டவாய்த்தலை அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

ஜீயபுரம்:

பெட்டவாய்த்தலை அருகில் உள்ள எஸ்.புதுகோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி இளஞ்சியம் (வயது 46). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.