சென்னை:
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்:
2021ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- முனைவர் வைகைச்செல்வன்
தந்தை பெரியார் விருது - அ. தமிழ்மகன் உசேன்
அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ. அருணாச்சலம்,
பேரறிஞர் அண்ணா விருது - அமரர் திரு. கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
பெருந்தலைவர் காமராசர் விருது - முனைவர் ச. தேவராஜ்
மகாகவி பாரதியார் விருது -கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது - அறிவுமதி (எ) மதியழகன்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - வி.என். சாமி
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது -முனைவர் வீ. சேதுராமலிங்கம்
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்:
2020ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது -வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
கபிலர் விருது -செ. ஏழுமலை
உ.வே.சா விருது - கி. இராஜநாராயணன்
கம்பர் விருது -மருத்துவர் எச்.வி. ஹண்டே
சொல்லின் செல்வர் விருது - நாகை முகுந்தன்
உமறுப்புலவர் விருது -ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
ஜி.யு.போப் விருது - செருமன் நாட்டைச் சேர்ந்த முனைவர் திருமதி உல்ரீகே நிகோலசு
இளங்கோவடிகள் விருது -மா. வயித்தியலிங்கன்
அம்மா இலக்கிய விருது- முனைவர் தி. மகாலட்சுமி
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது -ஆ. அழகேசன்
மறைமலையடிகளார் விருது - மறை. தி. தாயுமானவன்
அயோத்திதாசப் பண்டிதர் விருது - முனைவர் கோ.ப. செல்லம்மாள்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார் விருது -முனைவர் மோ. ஞானப்பூங்கோதை
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது -தினமணி நாளிதழ்
சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது- கல்கி வார இதழ்
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது- செந்தமிழ் திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது-முனைவர் கு. சிவமணி
வீரமாமுனிவர் விருது- ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சு
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது: சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத்
2019ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது- சே. இராஜாராமன்
மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்:
2020ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது- பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க்
இலக்கண விருது- இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு
மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பன்.
2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக 1 இலட்சம் ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 இலட்சம் ரூபாயும், தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவர்.