மரணம் 
செய்திகள்

சோழவந்தான் அருகே பாம்பு கடித்து பெண் பலி

சோழவந்தான் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி காளீஸ்வரி (வயது52). இவர் நிலத்தில் கதிர் சேகரித்தபோது பாம்பு கடித்து விட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.