கொள்ளை 
செய்திகள்

அரிசி மண்டி உரிமையாளர் வீட்டில் புகுந்து நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

அரிசி மண்டி உரிமையாளர் வீட்டில் புகுந்து நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த கிரான்ட் லைன் கிருஷ்ணா நகர் மனோன்மணி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்த போது, மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள்,1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.