கைது 
செய்திகள்

2 கிலோ கஞ்சா, 906 போதை மாத்திரைகள் பறிமுதல்- 4 பேர் கைது

2 கிலோ கஞ்சா, 906 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றம் சோத்துபாக்கம் சிக்னல் அருகே செங்குன்றம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களும், 906 போதை மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார்,செங்குன்றத்தை அடுத்த பவானி நகர் வ.உ.சி.தெருவை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 25), செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம் பட்டு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அகமது (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கஞ்சா போதை மாத்திரைகளை வினியோகம் செய்த முகப்பேர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சூரியகுமார்(22), மணி (24) ஆகிய 2 பேரை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.