செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த கிரான்ட்லைன் ஈ.வெ.ரா.பெரியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். லாரி டிரைவர். இவருடைய மனைவி செல்வி(வயது 50). இவர், நேற்று
முன்தினம் இரவு வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட செல்வி, பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.