திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம் 
செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

மாலை மலர்

சென்னை:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.செல்வம் நியமனம் செய்யப்படுகிறார். துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகாலம் அவர் அந்த பொறுப்பில் இருப்பார்.

எம்.செல்வம் 36 ஆண்டுகாலம் சிறந்த கற்பித்தல் அனுபவம் கொண்டவர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிக மற்றும் வர்த்தகத் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை சென்னை கிண்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் நேற்று வழங்கினார். அப்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடன் இருந்தார்.

மேற்கண்ட தகவல் சென்னை கிண்டி ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.