தற்கொலை 
செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் சங்கரி (வயது 17). இவர் கவரைப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சங்கரி, திடீரென மின்விசிறியில் புடவையை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT