திருட்டு 
செய்திகள்

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சாணார்பட்டி அருகே கணவாய்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேந்தன். இவர் ஊராட்சி மன்ற செயலராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வெற்றிவேந்தன் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை கணவாய்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.