விவசாயிகள் போராட்டம் 
செய்திகள்

மே 26-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் - விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் 2020, நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்நிலையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தொடங்கிய போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.