கைது 
செய்திகள்

ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் என்ற சூரிய பிரகாஷ் (வயது 21). ரவுடியான இவர், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பூமாலை கடை நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது அண்ணன் ஜெயக்குமார் (24) என்பவருடன் வண்ணாரப்பேட்டைக்கு வந்த சூர்யபிரகாஷ் மர்மநபர்களால் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது அண்ணன் ஜெயக்குமார் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாட்டில் மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சூரியபிரகாசை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அய்யப்பன் (23), சதாம் உசேன் (22), பப்லு என்ற கணேசன் (21), முத்துப்பேட்டையை சேர்ந்த கவுண்டம் (19), தினேஷ் (19) ஆகிய 5 பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான பாட்டில் மணியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT