திருமணம் 
செய்திகள்

இ-பதிவு நடைமுறையில் திருமணத்துக்கான அனுமதி நீக்கம்

மருத்துவ காரணம், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* மக்கள் வெளியூர் செல்ல இன்றும் நாளையும் தனியார், அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

* மருத்துவ காரணம், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* மருத்துவ காரணங்களுக்கு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.