திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் ஆக்கிரமிப்புகளால், சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதை தவிர்க்க அவ்வப்போது சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக, புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதில் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுவர்கள் இடிக்கப்பட்டன.