சென்னை:
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சீரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னையில் 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தனிகவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.