உயர்நீதிமன்ற மதுரை கிளை 
செய்திகள்

மதுரையில் ரத யாத்திரை- அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு

மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மதுரை:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற  கிளையில் செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரையில் ரத யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

மதுரையில் 100 வார்டுகளில் ரத யாத்திரை நடத்தவும், அதேசமயம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கினர்.