மழை 
செய்திகள்

ராமேசுவரத்தில் விடிய விடிய மழை

ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தூறல் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

மாலை மலர்

ராமேசுவரம்:

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தூறல் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.