மாயம் 
செய்திகள்

மங்களூரு கடலில் விசைப்படகு கவிழ்ந்து ராமநாதபுரம் மீனவர் மாயம்

மங்களூரு கடலில் விசைப்படகு கவிழ்ந்து காணாமல் போன மீனவரை தேடும் பணி நடைபெறுகிறது.

மாலை மலர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழிலாளர்களாக கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வேலை செய்கின்றனர். தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வதோடு 6 மாதத்துக்கு ஒருமுறை சொந்த ஊர் வந்து செல்வர். முத்துப்பேட்டை அருகே மேட்டுக்காரான் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் (வயது50) என்பவர் அங்கு வேலை செய்து வந்தார்.

கரையில் இருந்து 6 நாட்டிக்கல் தொலைவில் சென்ற போது சேதமடைந்து கடலுக்குள் மூழ்கி கிடந்த கப்பலில் விசைப்படகு மோதியது. இதில் விசைப்படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்து 11 பேரும் தத்தளித்தனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியாக மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் 10 பேரை மீட்டனர். இதில் கண்ணதாசன் மாயமானார். அவரது மனைவி வரலட்சுமி ராமநாதபுரம் மாவட்ட மரைன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

காணாமல் போன மீனவரை தேடும் பணி நடைபெறுகிறது. இங்குள்ள குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.