ரஜினிகாந்த் - தமிழருவி மணியன் 
செய்திகள்

தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அடுத்தமாதம் புதிய கட்சி தொடங்கப்போவதாக நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரஜினிகாந்த் அளித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனைக்குப்பின் தனது சகோதரர் சத்தியநாராயணனை சந்திக்க ரஜினிகாந்த் பெங்களூரு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.