கோப்புபடம் 
செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ராஜாக்கமங்கலம்:

குமரி மாவட்டம் குருந்தன்கோடு உன்னங்குளம் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சத்திய சுதாகர் (வயது 21), இவர், குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சத்திய சுதாகர், நேற்று முன்தினம் இரவு உன்னங்குளத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாம்பன்விளை அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி, திடீரென ஒரு திருப்பத்தில் திரும்பியது. பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.

இதில் சத்திய சுதாகர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்திய சுதாகரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அவருடைய தந்தை கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்து தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தினர்.