ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நடந்த காணொலி சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.
கொரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும்போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும்.