பிரியங்கா 
செய்திகள்

அசாம் மாநிலத்தில் பா.ஜனதா சகுனி வேலைகளை பார்க்கிறது- பிரியங்கா குற்றச்சாட்டு

அசாம் மாநிலத்தில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றிபெற்றால் யார் முதல் மந்திரி என்பதில் குழப்பமான நிலை நிலவுகிறது என்று பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

மாலை மலர்

கவுகாத்தி:

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தி, பிரியங்கா இருவரும் பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரியங்கா நேற்று முன்தினம் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-

அசாம் மாநிலத்தில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றிபெற்றால் யார் முதல் மந்திரி என்பதில் குழப்பமான நிலை நிலவுகிறது. அவர்களால் ஒரு தலைவர்களை கூட அடையாளம் காண முடியவில்லை.

இது வரை நடந்த பாரதீய ஜனதா ஆட்சியில் மக்கள் திருப்தியாக இல்லை. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. 6 பழங்குடி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தனர்.

அதை நிறைவேற்ற வில்லை. பா.ஜனதா ஆட்சியில் அசாம் மாநிலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அங்குள்ள பாரதீய ஜனதா சகுனி மாமா வேலைகளை பார்த்து மக்களை ஏமாற்றுகிறது.

அந்த கட்சியில் தற்போது கடுமையான குழப்பங்கள் நிலவுகிறது. 2 பிரிவாக கட்சி செயல்பட்டு வருகிறது. அவர்களால் நிலையான ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. மக்களுக்கு துரோகம் செய்யும் அவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து ஏமாந்து விட வேண்டாம்.

இவ்வாறு பிரியங்கா பேசினார்.