கோவை:
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவர் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த பழனிசாமிக்கு நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாலை 6.30 மணிக்கு பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.