பிரதமர் மோடி 
செய்திகள்

அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி 14- ந் தேதி ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா பரவல் விகிதம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.