கோப்புபடம் 
செய்திகள்

நாமக்கல்லில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாலை மலர்

நாமக்கல்:

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் மாதேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.