சமையல் எரிவாயு சிலிண்டர் 
செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை முதல் ரூபாய் 50 உயர்வதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நாளை காலை முதல் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 ஆக  உயர்த்தப்பட்டு 769 ரூபாய் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் இது 2-வது விலை உயர்வு அறிவிப்பு ஆகும்.  மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 4-ம் தேதி மெட்ரோ நகரங்களில் ரூ.25 உயர்ந்தது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT