ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 
செய்திகள்

கல்யாண் சிங் மறைவு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லக்னோ:

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கல்யாண் சிங் (89), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். 

கல்யாண் சிங் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை உத்தர பிரதேச மாநில முதல் மந்திரியாக இருந்தார். மேலும், அவர் ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் செயல்பட்டுள்ளார். 

இந்நிலையில், கல்யாண் சிங் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவில், கல்யாண் சிங் மக்களுடன் மந்திர இணைப்பைப் பெற்றுள்ளார். உத்தர பிரதேசத்தின் முதல் மந்திரியாக, அவர் தூய்மையான அரசியலையும், குற்றவாளிகள் மற்றும் ஊழலையும் தூய்மைப்படுத்தினார். அவர் வகித்த அலுவலகங்களை அவர் கண்ணியப்படுத்தினார். அவரது மறைவு பொது வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.  

SCROLL FOR NEXT