அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவும் அதே வேகத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும், மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியும் அங்கு பயன்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்னும் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அவர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.