தற்கொலை 
செய்திகள்

விழுப்புரத்தில் கர்ப்பிணி தற்கொலை- போலீசில் தந்தை புகார்

திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் கர்ப்பிணி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் வழுதரெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கும் கிருத்திகா (வயது 25) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கிருத்திகா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கும், இவரது மாமியார் ராசாத்தி அம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கிருத்திகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை அண்ணாமலை விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் விசாரணை செய்து வருகிறார். திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் கிருத்திகா இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.