கைது 
செய்திகள்

பூலாம்வலசு, ஈசநத்தம் பகுதிகளில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைது

பூலாம்வலசு, ஈசநத்தம் பகுதிகளில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு, ஈசநத்தம் ஆகிய பகுதிகளில் சேவல் கால்களில் கூர்மையான கத்தி களைகட்டி அனுமதியின்றி சேவல் சண்டை மற்றும் சேவல்கள் மீது பணம் வைத்து பந்தயம் கட்டி விளையாடுவதாகவும் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 12 பேரை பிடித்து வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும், சண்டைக்கு பயன்படுத்த பட்ட சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.