மரணம் 
செய்திகள்

பொன்னம்மாபேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

பொன்னம்மாபேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் பொன்னம்மாபேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் இறந்து கிடந்தார். அவருக்கு 60 வயது இருக்கும். இது குறித்து அங்கிருந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.