துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உடைந்த ஜன்னலையும் குண்டையும் காணலாம் 
செய்திகள்

ரெயில்வே ஊழியரின் வீட்டு ஜன்னலை துளைத்த துப்பாக்கி குண்டு- நரிக்குறவரிடம் விசாரணை

பாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எந்த ரக துப்பாக்கியிலிருந்து வெளியேறியது என்பதை கண்டறிய அதனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரி, காளிகாம்பாள் வீதியில் வசித்து வருபவர் பாஸ்கர் ரெயில்வே ஊழியர். இவர் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் குடும்பத்தினருடன் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது சுடப்பட்ட துப்பாக்கி குண்டின் ஒரு பகுதி வீட்டுக்குள் கிடந்தது. மேலும் வீட்டின் ஜன்னலும் உடைந்து துளை ஏற்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியை துளைத்து கொண்டு துப்பாக்கி குண்டு வீட்டிற்குள் வந்து விழுந்திருப்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் இதுபற்றி பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இடைவிடாது பட்டாசு வெடிப்பது போல் சத்தம் கேட்டு உள்ளது. நரிக்குறவர்கள் யாரேனும் பறவை அல்லது பன்றியை சுடும் போது தவறுதலாக துப்பாக்கி குண்டு ஜன்னல் கண்ணாடியை துளைத்துக்கொண்டு வீட்டிற்குள் பாய்ந்ததா ? அல்லது மர்ம நபர்கள் திட்டமிட்டு யாரையாவது குறிவைத்தபோது தவறுதலாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டுதப்பிச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு எந்த ரக துப்பாக்கியிலிருந்து வெளியேறியது என்பதை கண்டறிய அதனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நரிக்குறவர் ஒருவர் துப்பாக்கியுடன் அப்பகுதியில் திரிந்ததாகவும் பன்றி வேட்டையாடியதாகவும் சிலர் தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக நரிக்குறவர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.