பிரதமர் மோடி 
செய்திகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யுங்கள்- பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் வேலை செய்யுங்கள். உங்கள் உழைப்பை செயலை நாட்டு மக்கள் கவனக்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வந்தார். பீகார் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் அவர் உரையாற்றினார். அதில் பேசியதாவது,

தற்போ நடந்து முடிந்துள்ள தேர்தல் நடைமுறை என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். வேலை செய்பவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது தேர்தலில் நிரூபணமாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் வேலை செய்யுங்கள். உங்கள் உழைப்பை செயலை நாட்டு மக்கள் கவனக்கின்றனர். 

ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு அறைகளுடன் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.  தற்போது தேசம் முழுவதும் விரிந்து ஒவ்வொருவரின் இதயத்தையும் பாஜக வென்று வருகிறது.

தேர்தல் முடிவுகளில் வெற்றி தோல்வி என்பது எப்போதும் இருக்கும். கொரோனா காலகட்டத்தில் இந்த தேர்தல் என்பது மிகப்பெரிய ஒரு சாதனை. 

பீகாரில் 3 முறை ஆட்சியில் இருந்த பிறகும் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றார்.

கூட்டத்தில் பாஜக தலைவர் நட்டா, அமைச்சர்கள் அமித்ஷா நாஜ்நாத்சிங் , நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.