ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு 
செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி தொடங்கவுள்ளது.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்பின், டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கொரோனா மூன்றாவது அலை, தடுப்பூசி விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT