பிரதமர் மோடி 
செய்திகள்

பருவநிலை மாநாடு முடிந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.

மாலை மலர்

கிளாஸ்கோ:

இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜி20 மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பங்கேற்று உரையாற்றினார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்தார். 

இந்நிலையில், கிளாஸ்கோவில் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். 

இதையும் படியுங்கள்...மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் விவரம்