தற்கொலை 
செய்திகள்

கடையநல்லூர் அருகே பிளஸ்-2 மாணவர் தற்கொலை

கடையநல்லூர் அருகே பள்ளிக்கூடத்திற்கு போகாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் மணக்காடு தெருவைச் சேர்ந்தவர் தளவாய் குட்டி மகன் கார்த்திக் பாண்டி (வயது 17). இவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். கார்த்திக் பாண்டி பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. 

இதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக் பாண்டி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.