தற்கொலை 
செய்திகள்

தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மாலை மலர்

அனுப்பர்பாளையம்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளி செல்ல மறுத்ததால் தாயுக்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மலர்கொடியும், பிரியதர்ஷினியும் விஷம் குடித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.