தற்கொலை 
செய்திகள்

பிலிக்கல்பாளையம் அருகே விவசாயி ‌தற்கொலை

பிலிக்கல்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி ‌தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி (வயது 54). இவர் கடந்த 3 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. உடல் நிலை சரியாகாததால் மனமுடைந்து காணப்பட்ட ரங்கசாமி நேற்று முன்தினம் மாலை விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதை‌ பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.