சென்னை:
தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கடந்த 1989-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13-ம் நாள் அன்று, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அதற்குப் பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு, மீண்டும் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)- ன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
எஸ்.பீட்டர் அல்போன்ஸ் கடந்த 1989 மற்றும் 1991-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.