தற்கொலை 
செய்திகள்

பெரியகுளம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரியகுளம்:

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். பாலாஜி கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம்-கோம்பை சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.