பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் பிரேமா (வயது 23). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புள்ளிமான் கோம்பையை சேர்ந்த பாண்டி (26) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா வடுகப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரேமா விஷம் குடித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.