சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் அருகே பகவதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் பாலாஜி (வயது 22). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள நிலத்துக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த பகுதியில் விவசாயத்துக்கு சென்ற பொதுமக்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.