பெரம்பலூர்:
பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் இளங்கோவன் (வயது 24). கொத்தனாரான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளங்கோவனுக்கும், அவரது தாய் மற்றும் அண்ணனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த இளங்கோவன் குடிபோதையில் அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இளங்கோவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இளங்கோவன் குடும்ப தகராறில் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.