கைது 
செய்திகள்

பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது

பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நன்னிலம்:

பேரளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொத்தவாசல் ஆற்றுப் பாலம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டைகளில் மணல் இருந்தது. இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கொத்தவாசல் தெற்குதெருவை சேர்ந்த விக்னேஷ் (வயது25), ராஜபிரகாஷ் (19) என்பதும், இவர்கள் திருமலைராஜன் ஆற்றில் இருந்து மணலை சாக்குமூட்டையில் கட்டி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், ராஜபிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்