விபத்து பலி 
செய்திகள்

பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பேரளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நன்னிலம்:

பேரளம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது 20). போட்டோகிராபராக பணிபுரிந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து எரவாஞ்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். ரெட்டை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.