பேரையூர் அருகே கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலை மலர்
பேரையூர்:
பேரையூர் போலீசார் எஸ்.மேலபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சித்திரைக்கனி(வயது 60) என்பவர் அங்குள்ள பனந்தோப்பில்
விற்பனை செய்வதற்காக 8 லிட்டர் கள் வைத்திருந்தார். போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.